பஸ்சில் தொங்கல் பயணம் :காத்திருக்கும் ஆபத்து
பல்லடம்:பல்லடத்தில் இருந்து திருப்பூர், கோவைக்கு தினமும் செல்லும் பெண்கள் உள்ளிட்ட பயணிகள், போதிய பஸ் வசதி இல்லாததால் காலை, மாலை நேரங்களில் கடும் நெரிசலிலும், படிக்கட்டுகளில் தொங்கியும் பயணித்து வருகின்றனர்.
குறிப்பாக இளம் பெண்கள், வயதானவர்களும் ஆபத்தான பயணம் மேற்கொள்வதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. மாவட்டங்களுக்கு இடையே பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் தமிழக அரசின் திட்டம் அக்., 2 முதல் அமலுக்கு வர உள்ளது. இதனால், அரசு பஸ்களில் பெண்களின் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. ஏற்கனவே நெரிசலில் சிக்கி தவிக்கும் பெண்களுக்கு, கூடுதல் பஸ்கள் இயக்கினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலவச பஸ் திட்டத்தை தொடர்ந்து போக்குவரத்து கழகம் கூடுதல் பஸ்களை இயக்குமா என்ற கேள்வி பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும்
-
இடைத்தேர்தல் வெற்றிக்கு வியூகம்; பாமக ஆதரவை கோரும் தவெக
-
ஊர்வன, இருவாழ் உயிரினம் கணக்கெடுப்பு நிறைவு
-
ஆவணி அமாவாசை விழா
-
கோவில்களில் மொபைல் போன் தடையை தொடரலாமா? குழப்பத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை
-
மசினகுடியில் விதிமீறிய சுற்றுலா விடுதிக்கு 'சீல்'
-
கூட்டணி கட்சி தலைவர்களுடன் மேடையேறும் விஜய்; பொதுக்கூட்டங்களில் ஒன்றாக பங்கேற்க முடிவு