சீமை கருவேல மரங்கள் அகற்றம்

வேடசந்துார், செப்.10

தமிழகம் முழுவதும் உள்ள குளங்கள், ஊரணிகள், பொது இடங்களில் நிறைந்துள்ள நிலத்தடி நீரை உறிஞ்சும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் சீமை கருவேல மரங்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

அதன்படி வேடசந்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட 22 கிராம ஊராட்சிகளில் 17 குளங்கள், 21 ஊரணிகள் என மொத்தம் 38 இடங்களில் பி.டி.ஓ., கற்பகம் மேற்பார்வையில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்தது.

Advertisement