மேன்ஹோல் லீக் துர்நாற்றத்தால் அவதி

விருதுநகர்: விருதுநகர் சர்ச் இறக்கம் நேருஜி நகர் ரோட்டில் 3 நாட்களாக மேன்ஹோல் லீக் ஆகி கழிவு நீர் ரோட்டில் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது.

விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட நேருஜி நகரில் ரோட்டில் பாதாளச்சாக்கடை மேன்ஹோல் லீக் ஆகி கழிவு நீர் வெளியேறி ஆறாக ஓடுகிறது. இந்த ரோடு அருகே செல்லும் வாறுகாலில் மண் நிறைந்து அதனை சுத்தம் செய்யாததால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் அவ்வழியாக ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் 3 நாட்களாக சுவாசிக்க முடியாமல் பரிதவித்து சென்று வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லுாரிக்கு நடந்து செல்லும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

வயதானவர்கள் சிலர் நடந்து செல்லும் போது மூச்சுத்திணறலுக்கு ஆளாகி மயங்கி விழும் சம்பவங்களும் நடந்துள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Advertisement