புதுச்சேரியில் பைக் திருடிய திருச்சி நபர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் பைக் திருடிய திருச்சியை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

பெரியக்கடை சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சுப்ரேன் வீதி சந்திப்பில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த தமிழக பதிவெண் கொண்ட பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர்.

பைக்கின் ஆவணங்கள் இல்லாமல் இருந்தது. மேலும், அவரை போலீசார் விசாரித்ததில் திருச்சியை சேர்ந்த சிங்காரவேலன், 36; என்பதும், புதுச்சேரியில் பைக் திருடி சென்றதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, சிங்காரவேலனை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.

Advertisement