தி.மு.க., மாவட்ட செயற்குழு கூட்டம்

தேனி, செப்.10–

தேனியில் தி.மு.க., வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் செல்ல பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தனர். மாநில முன்னாள் இளைஞரணி துணை செயலாளர் சுபாஷ் சந்திர சேகர் பேசுகையில்,‘வாக்காளர்கள் அடிப்படையில் மாவட்டத்தில் கட்சி சீர்திருத்த பணிகள் நடக்கும். வயது வரம்பால் மாவட்ட செயலாளர் பதவியை இழப்பவர்களுக்கு தகுதியான பதவி வழங்கப்படும். ஒன்றியம், கிளை நிர்வாகிகள் தேர்வு விரைவில் நடக்க உள்ளது. அதற்காக தற்போதுள்ள செயலாளர்கள் விபரங்களை வழங்க வேண்டும். ஒற்றுமையாக பணிகளை முடித்து கட்சியின் சீர்திருத்த முடிவுகளை ஏற்க வேண்டும்,’ என்றார். மாநில நிர்வாகி காசி முத்து மாணிக்கம், மாநில நிர்வாகி மூக்கையா, முன்னாள் எம்.எல்.ஏ., சரவணக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Advertisement