சிதம்பரத்தில் போலி நகை கொடுத்து புதிய நகையை திருடிய 3 பேர் கைது

சிதம்பரம், செப். 10-

சிதம்பரத்தில் நுாதன முறையில் போலி நகையை கொடுத்து, ஏமாற்றி புதிய நகையை திருடிச் சென்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரத்தில் உள்ள ஒரு நகைக்கடையில், கடந்த 3 ம் தேதி பெண் ஒருவர் பர்தா அணிந்து வந்து, பழைய நகையை கொடுத்து புதிய நகையை வாங்கி சென்றார். அந்த பழைய நகையை ஆய்வு செய்ததில் அது போலி நகை என தெரிந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், சிதம்பரம் ஏ.எஸ்.பி., சத்ரியகவின் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், சப் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்முருகன், செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் குற்றவாளி தேடி வந்தனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் சண்முகம் நகர் எஸ்.ஆர்.எம் தோட்டத்தைச் சேர்ந்த கோவிந்தன் மனைவி ராதா,29; சேலம் சிவன் நாயக்கன்பட்டி மூர்த்தி மகன் மதன், 29; சேலம் மல்லூர் அருந்ததியர் நகர் கபாலி என்கிற சுப்பிரமணியன், 33; ஆகிய மூவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 5 சவரன் நகை, அவர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

Advertisement