பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து நகை, பணம் அபகரித்த ஆசாமி கைது

வடலூர்:பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, நகை, பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

வடலூரை சேர்ந்த, 40 வயது பெண் இரண்டு ஆண்டுகளுக்கு முன், நெய்வேலி மெயின் ரோட்டில் பியூட்டி பார்லர் நடத்தி வந்துள்ளார். அப்போது அந்த கடையின் மேலே கன்சல்டன்சி நிறுவனம் நடத்திய நபர், பியூட்டி பார்லர் நடத்திய பெண்ணிடம் கடையை விரிவுபடுத்த லோன் வாங்கி தருவதாக கூறி பழகி உள்ளார்.

மேலும், அந்த நபர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதனை மொபைலில் படம் பிடித்து, இணையத்தில் வெளியிடுவதாக அப்பெண்ணை மிரட்டி 45 சவரன் நகை, ரூ.10 லட்சம் பணம் வாங்கி மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிந்து, பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, நகை, பணம் பறித்த வடலூர், ராகவேந்திரா சிட்டியை சேர்ந்த ராமதாஸ் மகன் சுரேஷ்குமார்,48; என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், இந்த மோசடிக்கு சுரேஷ்குமாருக்கு உடந்தையாக இருந்த ரமேஷ் என்பவரை தேடிவருகின்றனர்.

Advertisement