இஷான் கிஷான் அரைசதம்: கிழக்கு மண்டல அணி முன்னிலை
சென்னை: துலீப் டிராபி பைனலில் கேப்டன் இஷான் கிஷான் அரைசதம் விளாச, கிழக்கு மண்டல அணி வலுவான முன்னிலை பெற்றது.
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் துலீப் டிராபி கிரிக்கெட் பைனலில் தெற்கு, கிழக்கு மண்டல அணிகள் விளையாடுகின்றன. கிழக்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 708 ரன் குவித்தது. மூன்றாம் நாள் முடிவில் தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 242/6 ரன் எடுத்திருந்தது. திலக் (56), மிலிந்து (2) அவுட்டாகாமல் இருந்தனர்.
திலக் ஏமாற்றம்: நான்காம் நாள் ஆட்டத்தில் ஏழாவது விக்கெட்டுக்கு 78 ரன் சேர்த்த போது சாமா மிலிந்து (43) அவுட்டானார். விஜய் (1), முகமது சிராஜ் (1) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய கேப்டன் திலக் வர்மா (99) சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 336 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. கிழக்கு மண்டலம் சார்பில் முகேஷ் குமார் 3, ஷமி, குரைஷி, ஷிகர் மோகன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இஷான் அரைசதம்: பின் 2வது இன்னிங்சை துவக்கிய கிழக்கு மண்டல அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி (8), அபிமன்யு ஈஸ்வரன் (3) ஜோடி சோபிக்கவில்லை. பின் இணைந்த ஷிகர் மோகன், கேப்டன் இஷான் கிஷான் என இருவரும் அரைசதம் கடந்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு 126 ரன் சேர்த்த போது இஷான் கிஷான் (80) அவுட்டானார். ஷிகர் மோகன் 52 ரன்னில் ஆட்டமிழந்தார். சுதிப் குமார் (2) ஏமாற்றினார்.
ஆட்ட முடிவில் கிழக்கு மண்டல அணி 2வது இன்னிங்சில் 212/5 ரன் எடுத்து, 584 ரன் முன்னிலை பெற்று, ஒருநாள் முன்னதாக கோப்பை வெல்வதை உறுதி செய்தது. குமார் குஷாக்ரா (34), குரைஷி (26) அவுட்டாகாமல் இருந்தனர்.
வைபவ் பதிலடி
முதல் நாள் ஆட்டத்தின் போது தெற்கு மண்டல அணி கேப்டன் திலக் வர்மா, கிழக்கு மண்டல அணியின் வைபவ் சூர்யவன்ஷியிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று, திலக் வர்மாவை வம்பிழுத்தார் வைபவ்.
மேலும்
-
பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைக்கப்படுமா?
-
இடைத்தேர்தல் வெற்றிக்கு வியூகம்; பாமக ஆதரவை கோரும் தவெக
-
ஊர்வன, இருவாழ் உயிரினம் கணக்கெடுப்பு நிறைவு
-
ஆவணி அமாவாசை விழா
-
கோவில்களில் மொபைல் போன் தடையை தொடரலாமா? குழப்பத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை
-
மசினகுடியில் விதிமீறிய சுற்றுலா விடுதிக்கு 'சீல்'