பொறுப்பேற்பு
சென்னை: தெற்கு மண்டல, புதிய ரயில்வே பாதுகாப்பு ஆணையராக, வெங்கட சுப்பிரமணியன் நேற்று பொறுப்பேற்றார்.
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டுள்ள, தெற்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்தின் கீழ், தெற்கு மற்றும் தென்மேற்கு ரயில்வே, சென்னை, பெங்களூரு, கொச்சி ஆகிய மெட்ரோ ரயில் நிறுவனங்கள் வருகின்றன.
இதன் ஆணையராக பொறுப்பேற்றுள்ள வெங்கட சுப்பிரமணியன், இந்திய ரயில்வே மின் பொறியியல் துறையில், 1993ம் ஆண்டு அதிகாரியாக பணியை தொடங்கினார்.
தெற்கு ரயில்வேயில், சென்னை, சேலம், பாலக்காடு கோட்டங்களிலும், தென்மேற்கு ரயில்வேயிலும், பல்வேறு பிரிவுகளில் உயர் பதவிகளை வகித்துள்ளார்.
புதிய ரயில்பாதை மற்றும் மெட்ரோ பாதைகளுக்கு அனுமதி வழங்குதல், கடுமையான விபத்துகள் குறித்து விசாரித்தல், இவரது முக்கிய பணிகளாகும் என, ரயில்வே தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீலகிரியில் அதிகரித்த விதிமீறிய கட்டுமானங்களுக்கு...கிடுக்கிபிடி!: ஐகோர்ட் உத்தரவின் படி, 943 கட்டடங்களுக்கு 'நோட்டீஸ்'
-
இளையராஜா சொத்துக்களை பறிமுதல் செய்யக்கோரி 'சரிகம' நிறுவனம் வழக்கு
-
'பல்லாரி சலோ' பாதயாத்திரை நிறைவு
-
தட்டாஞ்சாவடி தொகுதியில் தி.மு.க.,வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
-
பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்தவர் கைது
-
முதல்வர் விஜயின் பிரிட்டன் பயணம் ஏன்?: தமிழக அரசு விளக்கம்
Advertisement
Advertisement