'பல்லாரி சலோ' பாதயாத்திரை நிறைவு
பெங்களூரு: அரசுக்கு எதிராக பா.ஜ., நடத்திய 'பல்லாரி சலோ' பாதயாத்திரை நேற்று நிறைவு பெற்றது.
காங்கிரஸ் அரசின் தோல்விகளை கண்டித்து, பல்லாரி சலோ என்ற பெயரில் கடந்த 1ம் தேதி ராய்ச்சூரில் இருந்து பா.ஜ., தலைவர்கள் பாதயாத்திரை துவக்கினர். பத்து நாட்கள் நடந்த பாதயாத்திரை நேற்று பல்லாரியில் நிறைவு பெற்றது.
பிரமாண்ட பொது கூட்டம் நடந்தது. மத்திய கல்வி துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
'வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் கொள்ளையடித்த, 187 கோடி ரூபாயை அரசு மீட்டெடுக்க வேண்டும். வறட்சி பாதித்த தாலுகாக்கள் அறிவிக்க வேண்டும்; கே.பி.எஸ்.சி.,யில் நடந்த ஊழல்கள் குறித்து முறையாக விசாரிக்க வேண்டும்' என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இடைத்தேர்தல் வெற்றிக்கு வியூகம்; பாமக ஆதரவை கோரும் தவெக
-
ஊர்வன, இருவாழ் உயிரினம் கணக்கெடுப்பு நிறைவு
-
ஆவணி அமாவாசை விழா
-
கோவில்களில் மொபைல் போன் தடையை தொடரலாமா? குழப்பத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை
-
மசினகுடியில் விதிமீறிய சுற்றுலா விடுதிக்கு 'சீல்'
-
கூட்டணி கட்சி தலைவர்களுடன் மேடையேறும் விஜய்; பொதுக்கூட்டங்களில் ஒன்றாக பங்கேற்க முடிவு
Advertisement
Advertisement