மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் நுாற்றாண்டு விழா
சென்னை: மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் நுாற்றாண்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. இதில், திரளானோர் பங்கேற்று புகழஞ்சலி செலுத்தினர்.
சென்னை, தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நடந்த விழாவில், சென்னை கம்பன் கழக தலைவரும், எம்.பி.,யுமான ஜெகத்ரட்சகன் பேசுகையில், ''அரசியலில் ஆர்.எம்.வீ., போல் துாய்மையானவரை பார்க்க முடியாது. மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது.
''அதனால் தான், அவருடைய நினைவுகளை பகிரும்போதும், அவர் நம்மிடையே இல்லையே என்ற குறை உள்ளது,'' என்றார்.
டாக்டர் எம்.ஜி.ஆர்., பல்கலை வேந்தர் சண்முகம் பேசுகையில், ''ஆர்.எம்.வீ.,க்கு அரசியல் சாணக்கியர் எனும் பெயர் உண்டு. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்,'' என்றார்.
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுரேஷ்குமார் பேசுகையில், ''இன்றைய தலைமுறையினர் தியாகம், அன்பு, தனிமனித ஒழுக்கம் என்றால் என்ன என்பது தெரியாமல் உள்ளனர். ஆனால் ஆர்.எம்.வீ., இவை அனைத்திலும் தேர்ந்தவர். அவருடன் இருந்தோரை ஒழுக்க சீலர்களாக உருவாக்கிய பெருமை அவரையே சேரும்.
''தமிழக அரசு, ஆர்.எம்.வீ., வாழ்ந்த சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்,'' என்றார்.
மூத்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசுகையில், ''இன்று அரசியலில் என்னென்னவோ நடக்கிறது.
''ஆனால், அரசியலையும் நாகரிகமாக நடத்தியவர் ஆர்.எம்.வீ., அவரை போன்ற அரசியல்வாதியை உருவாக்க வேண்டும் என்பதே இவ்விழாவின் நோக்கம்,'' என்றார்.
மேலும்
-
பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைக்கப்படுமா?
-
இடைத்தேர்தல் வெற்றிக்கு வியூகம்; பாமக ஆதரவை கோரும் தவெக
-
ஊர்வன, இருவாழ் உயிரினம் கணக்கெடுப்பு நிறைவு
-
ஆவணி அமாவாசை விழா
-
கோவில்களில் மொபைல் போன் தடையை தொடரலாமா? குழப்பத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை
-
மசினகுடியில் விதிமீறிய சுற்றுலா விடுதிக்கு 'சீல்'