'டாஸ்மாக்' முறைகேடுக்கான சாட்சியங்கள் திரட்டப்படுகின்றன: அமைச்சர் விக்னேஷ் தகவல்
சென்னை: ''டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக சாட்சியங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில், மாவட்ட மேலாளர்களுடன் நேற்று, அமைச்சர் விக்னேஷ் ஆலோசனை நடத்தினார்.
10 ரூபாய் பின், அவர் அளித்த பேட்டி:
கடந்த காலங்களில் மது பாட்டிலுக்கு கூடுதலாக ஐந்து ரூபாய் வாங்கியவர்களை, 10 ரூபாயாக வாங்க சொன்னவர்கள் தான் தி.மு.க.,வினர்.
அவர்களால் கண்துடைப்பிற்காக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட சிலரை தற்போது பணியில் சேர்த்திருக்கிறோம்.
இம்மாதம், 1ம் தேதி முதல் கூடுதல் விலைக்கு மது விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஒரு மாவட்டத்தில் அதிக முறைகேடு நடக்கிறது என்றால், அதற்கு காரணமான பணியாளர்கள் மட்டுமின்றி, அந்த மாவட்ட மேலாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
என் பெயரை பயன்படுத்தி, கடைகளில் பணம் வசூலிப்பதாகவும் தகவல் வருகிறது. இதுவரை, மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
த.வெ.க.,வினர் உட்பட யாராக இருந்தாலும், தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் மீது புகார் வந்தாலும் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மது வகைகள் கொள்முதல் செய்யப்படும், 11 நிறுவனங்களும் சமமாக தான் பார்க்கப்படுகின்றன.
நடவடிக்கை கடந்த ஆட்சியில் டாஸ்மாக் மீது, அமலாக்கத்துறை என்னென்ன குற்றம் சுமத்தியுள்ளதோ, அவை அனைத்தையும் முதல்வர் விஜய் சட்டசபையில் தெரிவித்து இருக்கிறார். இதை எல்லாம் சொல்வது எதற்காக?
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக தான். அதற்கான சாட்சியங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டாஸ்மாக் நிறுவனம் எப்படி செயல்படுகிறது? எந்தெந்த ஊழல் வழிகளைப் பயன்படுத்தி பணம் ஈட்டுகிறது என்பதை அலசி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈட்டிக்கிட்ட இல்லல்ல ஈடி கிட்ட எல்லாம் ரெடியா இருக்குன்னு சொன்னாங்களே
இந்த படத்த பார்த்தா வேதனையாக இருக்கு. ஒரு சந்ததியை முழுக்க நாசமாக்கிட்டாங்க.
திராவிட ஒப்பந்ததாரர்களை ஓரங்கட்டிவிட்டு வேறு மாநிலத்தில் இருந்து அல்லது ரஷ்யா போன்ற நாடுகளிடம் இருந்து குறைந்த விலையில் சரக்கு வாங்கினால் எல்லாம் சரியாகிவிடும்.
முதல் நாள் தடை
அடுத்த நாள்
விலக்கல் மர்மம்
என்ன
“டாஸ்மாக் முறைகேடுக்கான சாட்சியங்கள் திரட்டப்படுகின்றன” என்கிறார்கள்.
சாட்சியங்கள் திரட்டட்டும்… விசாரணைகள் நடக்கட்டும்… நடவடிக்கைகள் எடுக்கட்டும்
ஆனால் அதையெல்லாம் விட முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது:
முதலில் டாஸ்மாக்கை இழுத்து மூடுவது எப்போது?
மக்களின் உடல்நலத்தைப் பாதித்து கிடைக்கும் வருமானத்தை வளர்ச்சி என்று சொல்ல முடியுமா?
மது ஒரு குடும்பத்தின் சேமிப்பை மட்டும் கரைப்பதில்லை ஒரு குடும்பத்தின் அமைதியையும், ஆரோக்கியத்தையும், எதிர்காலத்தையும் பாதிக்கிறது.
அரசின் கஜானா நிரம்புவதற்காக மக்களின் வாழ்க்கை காலியாகிவிடக் கூடாது
வருவாயை விட மக்கள் முக்கியம்.
கணக்கை விட உயிர் முக்கியம்.
அரசியலை விட ஆரோக்கியம் முக்கியம்.
வருவாயா? மக்களின் உயிரா?
தேர்வு ஒன்றுதான் — மக்களின் உயிர்
இனியும் காலம் தாழ்த்தாமல், மதுபான விற்பனையைக் கட்டுப்படுத்தவும், மதுவால் ஏற்படும் சமூக மற்றும் உடல்நலப் பாதிப்புகளைக் குறைக்கவும் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களைக் காப்பதே அரசின் முதல் கடமை.
முதலில் டாஸ்மாக்கை இழுத்து மூடுங்கள்மேலும்
-
இடைத்தேர்தல் வெற்றிக்கு வியூகம்; பாமக ஆதரவை கோரும் தவெக
-
ஊர்வன, இருவாழ் உயிரினம் கணக்கெடுப்பு நிறைவு
-
ஆவணி அமாவாசை விழா
-
கோவில்களில் மொபைல் போன் தடையை தொடரலாமா? குழப்பத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை
-
மசினகுடியில் விதிமீறிய சுற்றுலா விடுதிக்கு 'சீல்'
-
கூட்டணி கட்சி தலைவர்களுடன் மேடையேறும் விஜய்; பொதுக்கூட்டங்களில் ஒன்றாக பங்கேற்க முடிவு