மது பெட்டிகளை இறக்கி வைக்கும் கூலியை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்

பனமரத்துப்பட்டி: டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் டெலிவரி பணியாளர் சங்கம் சார்பில், சந்தியூரில் உள்ள சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவ-லகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் தனபால் தலைமை வகித்தார். அதில் மது பெட்டிகளை கடையில் இறக்கி வைக்க வழங்கப்படும் கூலியை உயர்த்தக்கோரி கோஷம் எழுப்-பினர்.


இதுகுறித்து, டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் ஊழியர்கள் கூறியதா-வது:சந்தியூர் கிடங்கில் வாகனத்தில் ஏற்றப்படும் மது பெட்டிகளை, மாவட்டம் முழுதும் உள்ள கடைகளில் இறக்கி வைக்கும் வேலையை, 20 ஆண்டாக செய்கிறோம். இதுவரை, அந்தந்த கடையில் இறக்கு கூலி கொடுத்தனர். டிரான்ஸ்போர்ட் ஒப்பந்த-தாரர், தினமும் டிரைவருக்கு, 400 ரூபாய், 4 ஊழியருக்கு தலா, 100 ரூபாய் கூலி கொடுத்தார். தற்போது, எம்.ஆர்.பி., விலைக்கு மதுபாட்டில் விற்பதால், இறக்கு கூலி கொடுக்க முடி-யாது என, கடை ஊழியர்கள் கூறிவிட்டனர். கடைக்கு முன் இறக்கி வைக்கப்படும் ஒரு மது பெட்டிக்கு, 10 ரூபாய், கடைக்குள் எடுத்துச்சென்று அடுக்கி வைக்க ஒரு பெட்டிக்கு, 5 ரூபாய் என, 15 ரூபாய் கூலி வழங்க வேண்டும். டிரைவருக்கு தினமும், 1,000 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement