கூட்டுறவு ஊழியருக்கு வரித்துறை பயிற்சி

மதுரை: மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு வரிபிடித்தம் தொடர்பான கருத்தரங்கு நடந்தது.

வருமான வரித்துறை துணை கமிஷனர் அழகப்பன் தலைமை வகித்தார். உதவி கமிஷனர் ரவீந்திரன், வருமான வரி அலுவலர்கள் மணிகண்டன், சுப்புலட்சுமி பங்கேற்று பேசினர். கூட்டுறவுத் துறையில் ஊழியர்கள் முறையாக வரித்தாக்கல் செய்வது, அதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், வரிப்பிடித்தம் செய்வது (டி.டி.எஸ்., பிடித்தம்), கூட்டுறவுத் துறையில் உள்ள வருமான வரிவிலக்கு, சலுகைகள் குறித்து விளக்கினர். கூட்டுறவுத்துறை ஊழியர்களுடன் வரிஅலுவலர்கள் கலந்துரையாடினர்.

Advertisement