சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதி பலி

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் கார் மோதி இறந்தார்.

விழுப்புரம் வழுத ரெட்டியை சேர்ந்தவர் ஏழுமலை,60; இவர் நேற்று இரவு 8:00 மணி அளவில் விக்கிரவாண்டிக்கு பஸ்சில் வந்தார்.

இதையடுத்து விக்கிரவாண்டி பி.டி.ஓ., அலுவலகம் எதிரே சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வேகமாக சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் ஏழுமலை துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவலறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement