ஆவணி அமாவாசை: தேவிக்கு வரமிளகாய் யாகம்

சேலம்: ஆவணி அமாவாசையை ஒட்டி, உலக நன்மை வேண்டி, கண் திருஷ்டி விலக வேண்டி, சேலம், மன்னார்பாளையம் பிரிவு சாலையில் உள்ள ஆதிபராசக்தி பிரத்யங்கிரா தேவி கோவிலில், வர மிளகாய் யாகம் நேற்று நடந்தது.


அதில் ஏராளமான பக்தர்கள், கைகளால் மிளகாய்களை யாகத்தில் சமர்ப்பித்து, தேவியை வழிபட்டனர்.தாரமங்கலம், பாப்பம்பாடி சந்தைப்பேட்டை மகா மாரியம்மன் கோவிலில் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அம்மன் இடது கையில் விநாயகரை வைத்தபடி, அலங்காரம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் இருந்த அம்ம-னுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
சங்ககிரி, வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன் கோவிலில் சக்தி-மாரியம்மன், விநாயகர் சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருட்-களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. மேச்சேரி பத்ரகாளியம்மன், சிம்ம வாகன அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத கந்தசாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்-களால் அபி ேஷகம் செய்யப்பட்டது. மூலவர் கந்தசாமிக்கு ராஜ அலங்காரத்தில் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
அதேபோல் வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் கந்தசாமிக்கு பட்டு வஸ்திரங்களால் சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடத்தப்-பட்டது. ஏராளளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
தலைவாசல், ஆறகளூர் வசிஷ்ட நதி கரையில் உள்ள அம்பாயி-ரம்மன் கோவிலில் மூலவருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்-ளிட்ட அபி ேஷக பூஜை நடந்தது. பின் வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
அதேபோல் சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர், சித்தர்-கோவில் சித்தேஸ்வரர், சுகவனேஸ்வரர் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்கள், ஆத்துார், கோட்டை சம்போடை வன மதுரகாளி-யம்மன், கடைவீதி அங்காளபரமேஸ்வரி, விநாயகபுரம் சமயபு-ரத்து மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில், அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
ரூ.1.38 கோடிக்கு காய்கறி விற்பனை
அமாவாசையை ஒட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள, 13 உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனை நேற்று அமோகமாக நடந்-தது.
அதில் அதிகபட்சமாக தாதகாப்பட்டி உழவர் சந்தையில், 28.95 லட்சம் ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக மேச்சேரி உழவர்சந்-தையில், 44,000 ரூபாய்க்கும் விற்பனை நடந்தது.
மொத்தம், 296.36 டன் காய்கறி மூலம், 1.38 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, வேளாண் விற்பனைத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement