ரயில்களில் 11 கிலோ கஞ்சா 13 கிலோ புகையிலை பறிமுதல்

சேலம்: ஜெய்ப்பூர் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று, சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.


பொது பெட்டியில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த பையை சோதனை செய்தபோது, 8.4 கிலோ கஞ்சா, 11.5 கிலோ புகை-யிலை பேஸ்ட் இருந்ததால், பறிமுதல் செய்தனர்.அதேபோல் பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் பொது பெட்டியில், கேட்பாரற்ற நிலையில் கிடந்த பையில், 2 கிலோ புகையிலை, 1 கிலோ கஞ்சா சாக்லேட் இருந்ததால் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சேலம் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்-தனர். அவர்கள், ரயிலில் கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரிக்கின்-றனர்.
மேற்கு வங்கத்தவர் கைது
ஷாலிமார் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று, தனிப்-படை போலீசார் சோதனை நடத்தினர். முன்பதிவற்ற பெட்டியில், ஒருவர் தலைக்கு அடியில் பையை வைத்து துாங்கிக்கொண்டி-ருந்தார். அவரை எழுப்பி, பையை சோதனை செய்தபோது, 2 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கிருஷ்ண படாகண்ட், 31, என்பதும், கஞ்சா கடத்தி வந்-ததும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், சேலம் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கஞ்சா விற்ற 3 பேர் கைது
சேலம், அம்மாபேட்டை போலீசார், நாமமலை அடிவாரத்தில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு, 'பல்சர்' பைக்கில் சந்தேகத்துக்கு இடமாக, 2 பேர் நின்றிருந்தனர். அவர்களை பிடித்து சோதனை செய்தபோது, பிளாஸ்டிக் கவரில், 2.5 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில், பொன்னம்மா-பேட்டை, மஜித் தெருவை சேர்ந்த ரவுடி ரகுபதி, 34, அரியாக-வுண்டம்பட்டி, பழனிசாமி நகர் ஜோயல், 23, என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், கஞ்சா, பைக்கை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் அன்னதானப்பட்டி போலீசார் நேற்று முன்தினம், சீலநாயக்கன்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீ-சாரை பார்த்ததும், 2 பேர் தப்ப முயன்றனர். ஒருவரை பிடித்து விசாரித்ததில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, மேமாத்துார், தோப்புத்தெருவை சேர்ந்த சரண்ராஜ், 29, என தெரிந்தது. அவரை சோதனை செய்ததில், 3 கிலோ கஞ்சா வைத்த-ருந்தார். அவரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்து, தப்பி ஓடியவர் குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement