நரசிங்கபுரத்தில் மின்தடை மக்கள் கடும் அவதி

ஆத்துார்: நரசிங்கபுரம், அப்பமசமுத்திரம், புது உடையம்பட்டி, பழைய உடையம்பட்டி, செல்லியம்பாளையம், தில்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு, 7:40 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. நீண்ட நேரமாக மின்சார வினியோகம் இல்லாததால், சாலை, தெருக்கள் இருளில் மூழ்கின. தவிர வியாழன்தோறும் கூடும் நர-சிங்கபுரம் வாரச்சந்தையில், 'டார்ச்' லைட் வெளிச்சத்தில் காய்கறி விற்க வேண்டிய நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டனர். இரவு, 9:00 மணிக்கு மேலும், மின் வினியோகம் இல்லாததால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.


இதுகுறித்து மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில், 'டிரான்ஸ்-பார்மர் பகுதியில், 'பியூஸ்' நிற்கவில்லை. மாற்றி இணைப்பு கொடுத்தும் மின் வினியோகம் வழங்க முடியவில்லை. சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றனர்.

Advertisement