கால்வாயில் தண்ணீர் செல்ல இடையூறு தேங்கிய ஆகாயத்தாமரைகள் அகற்றம்
மேட்டூர்: சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் கரையோர நகர், கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, கடந்த, 7ல், மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் வினாடிக்கு, 400 கனஅடி நீர் திறக்கப்பட்டது. வரும், 17 வரை, கால்வாயில் நீர் திறக்கப்-படும்.
முன்னதாக கால்வாய் வறண்டு பல இடங்களில் ஆகாயத்தாம-ரைகள், குப்பை தேங்கின. இந்நிலையில் குடிநீருக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், ஆங்காங்கே தேங்கிய ஆகாயத்தாமரைகள், தண்ணீர் தொடர்ச்சியாக செல்ல இடையூறாக இருந்தது. இதை, சில நாட்களாக நீர்வளத்துறை ஊழியர்கள் பொக்லைன் மூலமும், சில பகுதிகளில் நீரில் இறங்கியும் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மேட்டூர் நகராட்சி பொன்னகர் பாலம் அடிவாரம் ஏராளமான குப்பை, ஆகாயத்தாம-ரைகளை, நீர்வளத்துறை ஊழியர்கள் கால்வாயில் இறங்கி அகற்-றினர்.தொடர்ந்து ஆங்காங்கே கால்வாயில் தேங்கியிருந்த ஆகாயத்தா-மரைகள், குப்பையை அகற்றி, தண்ணீர் தடையின்றி செல்ல நட-வடிக்கை மேற்கொண்டனர்.
மேலும்
-
பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைக்கப்படுமா?
-
இடைத்தேர்தல் வெற்றிக்கு வியூகம்; பாமக ஆதரவை கோரும் தவெக
-
ஊர்வன, இருவாழ் உயிரினம் கணக்கெடுப்பு நிறைவு
-
ஆவணி அமாவாசை விழா
-
கோவில்களில் மொபைல் போன் தடையை தொடரலாமா? குழப்பத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை
-
மசினகுடியில் விதிமீறிய சுற்றுலா விடுதிக்கு 'சீல்'