மேட்டூர் அணை நீர்வரத்து 2,250 கன அடியாக சரிவு

மேட்டூர்: கர்நாடகா அணைகளில் இருந்து கடந்த மாதம், 1 முதல் திறக்-கப்பட்ட உபரி நீர் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு வந்தது. இதனால் கடந்த மாதம், 4ல், 73.02 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், கடந்த, 6ல், 92.39 அடியாக உயர்ந்தது. பின் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்-பட்ட நீரின் அளவு, வினாடிக்கு, 12,000 கனஅடியாக அதிகரிக்கப்-பட்டது. அதேநேரம் கர்நாடகா அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்-பட்டது.


கடந்த, 6ல் வினாடிக்கு, 9,709 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, 7ல், 8,993 கன அடி; நேற்று முன்தினம், 4,822 கன அடி; நேற்று மாலை, 2,250 கன அடியாக சரிந்தது. இதற்-கேற்ப நேற்று முன்தினம், 91.28 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று மாலை, 90.52 அடியாக சரிந்தது.

Advertisement