முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 1,937 அரசு ஊழியர்கள், மாணவர்கள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி: மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்-டியில், 1,937 பேர் பங்கேற்றனர்.


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்-டிகள், 2வது நாளாக நேற்று அரசு ஊழியர்களுக்கு, தடகளம், இற-குப்பந்து, கபடி, கேரம், சதுரங்கம், கையுந்துபந்து, யோகாசனம் ஆகிய போட்டிகள் நடந்தது. பள்ளி மாணவியருக்கு, ஹாக்கி, கால்பந்து, சிலம்பம், நீச்சல், கையுந்துபந்து ஆகிய விளையாட்டு போட்டிகள், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டரங்கம், அந்தி-வாடி மினி விளையாட்டு அரங்கம், ஓசூர் அதியமான் பொறி-யியல் கல்லுாரி, கந்திகுப்பம் கிங்ஸ்லி மெட்ரிக் மேல்நிலைப்-பள்ளி, நாகரசம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடந்தது. இதில், தடகளத்தில், 150 பேர், இறகுப்பந்து - 132, கபடி - 112, கேரம் - 77, சதுரங்கம் - 147, கையுந்து பந்து - 120, யோகா-சனம் - 8, ஹாக்கி - 198, சிலம்பம் - 215, நீச்சல் - 150 மற்றும் கால்பந்தில், 628 பேர் என மொத்தம், 1,937, மாணவ, மாண-வியர் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடு-களை மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொ) நடராஜ முருகன் செய்திருந்தார்.

Advertisement