'இளம் தலைவர்கள் உரையாடல் - 2027' வினாடி - வினா போட்டியில் பங்கேற்க அழைப்பு

கிருஷ்ணகிரி: 'விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் - 2027' நிகழ்ச்சியில், கல்லுாரி மாணவ, மாணவியர் அதிகம் பங்கேற்க, தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து கிருஷ்ணகிரி, 'மை பாரத் கேந்திரா' அமைப்பின் மாவட்ட இளைஞர் அலுவலர் ராஜசெட்டி மஞ்சுநாத் நிருபர்க-ளிடம் கூறியதாவது: இந்திய அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்ச-கத்தின் கீழ் செயல்படும் 'மை பாரத்' சார்பில், 15 முதல் 29 வய-திற்கு உட்பட்ட இளைஞர்களுக்கான, 'விக்சித் பாரத் இளம் தலை-வர்கள் உரையாடல் - 2027' வினாடி வினா போட்டி தற்போது, 'மை பாரத்' இணையத்தில் கடந்த மாதம், 17ம் தேதி துவங்கி வரும், 30ம் தேதி வரை நடக்கிறது. வினாடி வினா போட்டியில் வெற்றி பெறுபவர்கள், ஆன்லைனில் கட்டுரை எழுதும் போட்-டியில் பங்கேற்பார்கள். இதில் வெற்றி பெறுபவர்கள், பி.பி.டி., விளக்கக்காட்சி போட்டியில் பங்கேற்பார்கள். இதில் தேர்வாகும் இளைஞர்கள், 2027 ஜன., 10ம் தேதி முதல், 12ம் தேதி வரை புதுடில்லியில் நடக்கும், தேசிய இளையோர் திருவிழாவில், பிர-தமர் மோடியை நேரில் சந்தித்து, கலந்துரையாடும் வாய்ப்பை பெறுவார்கள். எனவே, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்-திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரி மாணவ, மாணவியர் அதிகளவில் பங்கேற்கலாம். வினாடி வினா போட்டிக்கு, https://mybharat.gov.in/vbyld--2027 என்ற இணை-யத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement