மானியத்தில் வேளாண் கருவிகள்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
கிருஷ்ணகிரி: வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் பெற விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என, கிருஷ்ண-கிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஆதி திராவிடர், பழங்கு-டியினர் பிரிவினை சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு, 20 சதவீத கூடுதல் மானியமும், பொது பிரிவை சார்ந்த சிறு, குறு விவசாயிக-ளுக்கு, 10 சதவீத கூடுதல் மானியம் பவர் வீடர், நெல் நாற்று நடவு இயந்திரம் மற்றும் தட்டு வெட்டும் இயந்திரம் ஆகிய கரு-விகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.விவசாயிகள், மொபைலில் 'உழவர் செயலி' ஆப் பதிவிறக்கம் செய்து, விபரங்களை பதிவிட வேண்டும். வேளாண் இயந்தி-ரங்கள் மற்றும்
கருவிகளுக்கான இலக்கு வேளாண்மை பொறியியல் துறையின் இணையதளமான, https://mts.aed.tn.gov.in மூலம் பதிவேற்றம் செய்யப்படும். பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் மட்டுமே, ஒவ்-வொரு மாதமும், 1 முதல், 7ம் தேதி வரை அல்லது, 15 முதல், 21ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விவசா-யிகளின் விண்ணப்பங்கள் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட குலுக்கல் தேர்வு முறையில், இணையத்தின் வாயிலாக தேர்ந்தெ-டுக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு, செயற்பொறியாளர் அலுவலகம், வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி. உதவி செயற்பொறியாளர் அலுவலகம், வேளாண்மை பொறியியல் துறை, கிருஷ்ணகிரி மற்றும் உதவி செயற்பொறியாளர் அலுவலகம், சென்னாத்துார் அஞ்சல், சானசந்-திரம், ராயக்கோட்டை ரோடு, ஓசூர் ஆகிய அலுவலகங்களை தொடர்புக்கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
இடைத்தேர்தல் வெற்றிக்கு வியூகம்; பாமக ஆதரவை கோரும் தவெக
-
ஊர்வன, இருவாழ் உயிரினம் கணக்கெடுப்பு நிறைவு
-
ஆவணி அமாவாசை விழா
-
கோவில்களில் மொபைல் போன் தடையை தொடரலாமா? குழப்பத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை
-
மசினகுடியில் விதிமீறிய சுற்றுலா விடுதிக்கு 'சீல்'
-
கூட்டணி கட்சி தலைவர்களுடன் மேடையேறும் விஜய்; பொதுக்கூட்டங்களில் ஒன்றாக பங்கேற்க முடிவு