சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் அரூர் நகரம்
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில் இருந்து, நான்கு-ரோடு வரையுள்ள பைபாஸ் சாலையில், ஸ்டேட் வங்கி, கனரா வங்கி மற்றும் தனியார் வங்கிகள் என, 10க்கும் மேற்பட்ட வங்-கிகள் உள்ளன. அதேபோல், டிபார்மண்ட் ஸ்டோர், நகைக்க-டைகள், பேக்கரி, ஓட்டல், இரும்பு, மரம், எலக்ட்ரிக், ஜவுளிக்க-டைகள், இருசக்கர வாகன ஷோரூம்கள், உள்ளிட்ட முக்கிய வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. இவற்றிற்கு தினமும், ஏரா-ளமானோர் வந்து செல்வதால், மக்கள் கூட்டம் அதிகளவில் உள்-ளது. வியாபார நிறுவனங்களும், வணிக வளாகங்களும் பார்க்கிங் வசதி இல்லாமலேயே செயல்படுகின்றன. இதனால், அந்த நிறுவ-னங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்த, சாலையையே பார்க்கிங்காக பயன்படுத்துகின்றனர்.
அதனால், போக்குவரத்து நெரிசலாகி மக்களும், வாகன ஓட்டி-களும் பரிதவிக்கின்றனர். வாகனங்கள், ஒருவழி சாலையில் செல்-வது போல், ஒன்றின் பின் ஒன்றாக மட்டுமே செல்ல முடிகிறது. இதனால், தினமும் விபத்து ஏற்படுவதாக, மக்கள் புகார் கூறுவ-துடன், பார்க்கிங் வசதி இல்லாத வணிக நிறுவனங்களுக்கு, நோட்டீஸ் விட்டு பார்க்கிங் வசதி ஏற்படுத்த, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
இடைத்தேர்தல் வெற்றிக்கு வியூகம்; பாமக ஆதரவை கோரும் தவெக
-
ஊர்வன, இருவாழ் உயிரினம் கணக்கெடுப்பு நிறைவு
-
ஆவணி அமாவாசை விழா
-
கோவில்களில் மொபைல் போன் தடையை தொடரலாமா? குழப்பத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை
-
மசினகுடியில் விதிமீறிய சுற்றுலா விடுதிக்கு 'சீல்'
-
கூட்டணி கட்சி தலைவர்களுடன் மேடையேறும் விஜய்; பொதுக்கூட்டங்களில் ஒன்றாக பங்கேற்க முடிவு