ஜி.ஹெச்.,ல் குவியும் நோயாளிகள்

அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில், சமீபத்தில் சாரல்மழை பெய்தது. இதனிடையே கடந்த ஒரு வாரமாக கடும் வெயில் அடிக்கிறது. பருவநிலை மாற்றத்தினால், மக்களின் உடல்நிலை பாதித்து வருகிறது.


அதன்படி, அரூர் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் சளி, காய்ச்சல் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள், அரூரிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற குவிந்து வருகின்றனர். மேலும், காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற வருவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகி-றது. அதேபோல், அனைத்து மருந்து கடைகளிலும், சளி, இருமல், காய்ச்சல் போன்ற உபாதைகளுக்கு மாத்திரை, இருமல் மருந்து போன்றவற்றை வாங்கி செல்‍வோரின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisement