தமிழில் பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு
பென்னாகரம்: ஏரியூர் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் முதலாமாண்டு விழாவை-யொட்டி, 'தமிழில் பெயர் பலகை வைப்போம்' என்னும் விழிப்பு-ணர்வு பேரணி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, சின்னப்பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் பழனி தலைமை வகித்தார். ஏரியூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில், வணிக நிறுவனங்கள், தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். தமிழகத்தில் கடைகள் அனைத்திலும், தமிழில் பெயர் பலகை வைப்பது, வீட்டில் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும், தமிழகத்தின் அனைத்து வணிகம் மற்றும் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைத்தல் ஆகியவை குறித்த துண்டு பிரசுரங்கள், பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேரணியில், ஏரியூர் தமிழ்ச்சங்க தலைவர் நாகராஜ், ஏரியூர் நியூட்டன் பள்ளியின் தாளாளர் பாபு, ஏரியூர் அனைத்து வணி-கர்கள் சங்கத்தின் தலைவர் கமலேசன் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைக்கப்படுமா?
-
இடைத்தேர்தல் வெற்றிக்கு வியூகம்; பாமக ஆதரவை கோரும் தவெக
-
ஊர்வன, இருவாழ் உயிரினம் கணக்கெடுப்பு நிறைவு
-
ஆவணி அமாவாசை விழா
-
கோவில்களில் மொபைல் போன் தடையை தொடரலாமா? குழப்பத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை
-
மசினகுடியில் விதிமீறிய சுற்றுலா விடுதிக்கு 'சீல்'