கூட்டுறவுத்துறையில் குறைதீர் கூட்டம் மண்டல இணைப்பதிவாளர் தகவல்
தர்மபுரி: தர்மபுரி மண்டல இணைப்பதிவாளர் சரவணன் தெரிவித்திருப்ப-தாவது: கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் அலுவலர்கள், பணி-யாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியா-ளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள, வழி-காட்டு நெறி
முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வட்டார அளவில் கள அலுவலரிடம், 11ம் தேதி(இன்று) கோரிக்கை மனு அணிக்கலாம். இவை தகுதியின் அடிப்படையில் தீர்வு காணப்படும். கூட்டுறவு சார்பதிவாளர், கள அலுவலர் அளவில் தீர்வு செய்ய இயலாத கோரிக்கை மனுக்-களும், துணைப்பதிவாளரால் நேரடியாக பெறப்படும் கோரிக்கை மனுக்களும், தர்மபுரி சரக துணைப்பதிவாளரால், 11ம் தேதி (இன்று) தகுதியின் அடிப்படையில் தீர்வு காணப்படும்.கூட்டுறவு சார்பதிவாளர்கள், கள அலுவலர்கள் மற்றும் துணைப்பதிவாளர் அளவில் தீர்வு செய்ய இயலாத கோரிக்கை மனுக்களும் மண்டல இணைப்பதிவாளரால் நேரடியாக பெறப்-படும் கோரிக்கை மனுக்களும்,18ம் தேதி தகுதியின் அடிப்ப-டையில் தீர்வு காணப்படும். எனவே கூட்டுறவுத்துறை அலுவ-லர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், தங்கள் பணி தொடர்பா-கவும், பணி சார்ந்த கோரிக்கை தொடர்பாகவும், கோரிக்கை மனுக்களை அளித்து தீர்வு காணலாம்.
தர்மபுரி வட்டாரத்திற்கு, இணைப்பதிவாளர் அலுவலக கூட்டரங்-கத்திலும், நல்லம்பள்ளி வட்டாரத்திற்கு அதியமான் கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திலும், பென்னாகரம் வட்டாரத்திற்கு பாப்பாரப்பட்டி சிவா தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், பாலக்கோடு வட்டாரத்திற்கு பாலக்கோடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், காரி-மங்கலம் வட்டாரத்திற்கு காரிமங்கலம் தொடக்க வேளாண் கூட்-டுறவு கடன் சங்கம், மொரப்பூர் வட்டாரத்திற்கு, மொரப்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், அரூர் வட்டாரத்-திற்கு அரூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், பாப்பி-ரெட்டிப்பட்டி வட்டாரத்திற்கு பி.துரிஞ்சிப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திலும், மனுக்கள், காலை, 9:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை பெறப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைக்கப்படுமா?
-
இடைத்தேர்தல் வெற்றிக்கு வியூகம்; பாமக ஆதரவை கோரும் தவெக
-
ஊர்வன, இருவாழ் உயிரினம் கணக்கெடுப்பு நிறைவு
-
ஆவணி அமாவாசை விழா
-
கோவில்களில் மொபைல் போன் தடையை தொடரலாமா? குழப்பத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை
-
மசினகுடியில் விதிமீறிய சுற்றுலா விடுதிக்கு 'சீல்'