கரூரில் இரண்டாவது நாளாக முதல்வர் விளையாட்டு போட்டி
கரூர்:கரூர்
மாவட்ட விளையாட்டு மைதானத்தில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
நடந்து வருகிறது. நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர்
முத்துக்குமரன் தலைமை வகித்தார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் பேசியதாவது:
தமிழ்நாட்டிலிருந்து,
ஒலிம்பிக் போட்டிகளில் வீரர்கள் அதிகளவில் பங்கேற்க தேவையான
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, உட்கட்டமைப்பு
வசதிகளை மேம்படுத்துதல், திறமையான விளையாட்டு வீரர்களை
கண்டறிந்து ஊக்குவித்தல், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு உரிய
ஊக்கத்தொகை வழங்குதல், சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் பங்கேற்க
தேவையான பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு பேசினார்.
பால்வள
மேம்பாட்டுத்துறை அமைச்சர் விஜயலஷ்மி பேசுகையில்,''மாணவர்களின்
கல்வி வளர்ச்சிக்கு அளித்து வரும் முக்கியத்துவத்திற்கு இணையாக,
விளையாட்டு துறையின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.,
விளையாட்டு திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக பல்வேறு சிறப்பான
திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக,
தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் முதல்வர் கோப்பை
விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன,'' என்றார்.
நிகழ்ச்சியில், கிருஷ்ணராய
புரம் த.வெ.க., எம்.எல்.ஏ., சத்யா, மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் உள்பட பலர் பங்கேற்றனர்
மேலும்
-
'எச் - 1 பி' விசா குறித்து அதிபர் டிரம்ப் முக்கிய அறிவிப்பு; 60 நாள் சலுகை காலம் ரத்து
-
அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம்
-
விவசாயியிடம் மோதிரம் பறித்த மூவருக்கு வலை
-
மின் வாரியத்தை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல்
-
கார் மோதி முதியவர் பலி
-
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டில்லி வருகை; ரஷ்ய அதிபர் புடினுக்கு உற்சாக வரவேற்பு