கார் மோதி முதியவர் பலி

கரூர்:கரூர் மாவட்டம் மேல்ஒரத்தையை சேர்ந்தவர் குமாரசாமி, 65. தேங்காய் சிரட்டை வியாபாரம் செய்து வந்தார். இவர், வேலாயுதம்பாளையத்தில் தேங்காய் சிரட்டை விற்பனை செய்த பின், வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார்.

அப்போது, நாணப்பரப்பு பிரிவில் நடந்து சாலையை கடக்க முற்பட்டபோது, சேலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே குமாரசாமி பலியானார். இதுகுறித்து, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement