பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டில்லி வருகை; ரஷ்ய அதிபர் புடினுக்கு உற்சாக வரவேற்பு

1


புதுடில்லி: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புடின் டில்லி வந்தார். இன்று மதியம் 3 மணியளவில், பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய பேச்சு நடத்துகிறார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு நாளை (செ ப் 12) மற்றும் நாளை மறுநாள் (செப் 13) டில்லியில் பாரத் மண்டபத்தில் நடக்கிறது. இந்த மாநாட்டில் சீனா, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா, ஈரான் அதிபர்கள் பங்கேற்கின்றனர்; அனைத்து ஏற்பாடுகளும் டில்லியில் செய்யப்பட்டு உள்ளதுடன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புடின் டில்லி வந்தார். விமான நிலையத்தில் அவரை eத்திய இணை அமைச்சர் கே.வி. சிங் வரவேற்றார். இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் கூறியிருப்பதாவது:

18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில பங்கேற்க டில்லி வந்துள்ள ரஷ்ய அதிபர் புடினை அன்புடன் வரவேற்கிறோம். இந்தியாவும் ரஷ்யாவும் நீண்டகால உறவுகளை கொண்டுள்ளன. இவ்வாறு ரந்தீர் ஜெயஸ்வால் கூறியுள்ளார். இன்று மதியம் 3 மணியளவில், பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய பேச்சு நடத்துகிறார்.

Advertisement