மின் வாரியத்தை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல்
குளித்தலை:அறிவிக்கப்படாத
மின்வெட்டை கண்டித்து, இரும்பூதிபட்டி துணை மின் நிலையம் எதிரே,
நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் பொதுமக்கள் சாலை மறியல்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளித்தலை ஆர்.டி.ஓ.. வருவாய்
பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக, இரவு நேரங்களில் முன்
அறிவிப்பு இல்லாத மின்தடை ஏற்பட்டு வருகிறது.
இரவு
நேரங்களில் மின் துண்டிக்கப்படுவதால், குழந்தைகள் முதல்
முதியோர்கள் வரை பாதிப்புக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் நேற்று
முன்தினம் இரவு, 9:30 மணியளவில் குளித்தலை பகுதியில்
அறிவிக்கப்படாத மின் துண்டிப்பு நடைபெற்றதால், இரும்பூதிபட்டி
துணை மின் நிலையம் அலுவலகம் முன், குளித்தலை - மணப்பாறை
நெடுஞ்சாலையில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த குளித்தலை இன்ஸ்பெக்டர் குணமதி, எஸ்.ஐ., சரவணன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு
வார்த்தை நடத்தி, தடையில்லா மின்சார வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும்
-
'எச் - 1 பி' விசா குறித்து அதிபர் டிரம்ப் முக்கிய அறிவிப்பு; 60 நாள் சலுகை காலம் ரத்து
-
அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம்
-
விவசாயியிடம் மோதிரம் பறித்த மூவருக்கு வலை
-
கார் மோதி முதியவர் பலி
-
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டில்லி வருகை; ரஷ்ய அதிபர் புடினுக்கு உற்சாக வரவேற்பு
-
கரூரில் இரண்டாவது நாளாக முதல்வர் விளையாட்டு போட்டி