காங்., வேட்பாளரை ஆதரித்து ‘ரோடு ேஷா’ நடத்தி ஓட்டு சேகரிப்பு
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் காங்., வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, கார்த்திக்கேயன் எம்.எல்.ஏ.,முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள எம்.எல்.ஏ., வைத்தியநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பார்க்குமுடையான்பட்டு சந்திப்பு, கொட்டுப்பாளையம் பகுதியில் இருந்து ரோடு ேஷா நடத்தி தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், ‘மதச்சார்பற்ற சமூகநீதி கூட்டணி சார்பில், காங்., வேட்பாளர் விநாயகம் போட்டியிடுகிறார். தட்டாஞ்சாவடி தொகுதியில் கடந்த காலங்களில் போதிய வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
வேலை வாய்ப்பு, பள்ளிகள், மருத்துவ வசதிகள், சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக மக்கள் அதிருப்தியில் உள்ளனர். முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ ., பதவியை ராஜினாமா செய்ததன் காரணமாகவே இந்த இடைத்தேர்தல் நடக்கிறது. என்.ஆர்.காங்.,வேட்பாளர் அசோக் ஆனந்தன் பண பலத்தை நம்பி தேர்தலை சந்திக்கிறார். தி.மு.க., வேட்பாளர் சேது செல்வம் மீது விமர்சனங்கள் உள்ளது.
காங்., வேட்பாளர் விநாயகத்திற்கு தொகுதி மக்களிடையே ஆதரவு இருக்கிறது. தொகுதி மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து இருக்கின்றனர்’ என்றார்.
விநாயகத்தை வெற்றி
பெறச் செய்யுங்கள்
காங்., வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து நேரு எம்.எல்.ஏ., பேசுகையில்,
‘புதுச்சேரி மாநிலத்தில் பின்தங்கிய பகுதியாக தட்டாஞ்சாவடி மாறி வருகிறது.
தொகுதியை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு வர விநாயகம் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., வாக வந்தால், அனைவரும் இணைந்து தொகுதி முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம்.
தட்டாஞ்சாவடி தொகுதியில் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள கோரிக்கைகளை சட்டபைக்கு எடுத்துச் சென்று, அவற்றை நிறைவேற்ற விநாயகம் நடவடிக்கை எடுப்பார். தட்டாஞ்சாவடி தொகுதி மக்கள் அனைவரும் கை சின்னத்திற்கு ஓட்டுப்போட்டு விநாயகத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்’ என்றார்.
மேலும்
-
தேர்தல் பிரசாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்திய உதயநிதி மீது வழக்கு
-
பாகிஸ்தான் உளவாளிக்கு ரகசிய தகவல் கசிவு; கோவையில் கடற்படை வீரர் கைது
-
உலகின் பார்வை கோவையின் மீது... உயரப்போகிறது உலகத்திறன் மையங்கள்: 2032க்குள் 200 ஆக மாறும்!
-
துணை விமானியின் பயங்கர சதிச்செயல் ; நடுவானில் நடந்த பதற்றமான தருணத்தை விவரித்த இந்திய விமானி ஸ்மிட் மச்சார்
-
சிறப்பு விருந்தினராக இஸ்ரேலுக்கு வருகை தாருங்கள்; இந்திய விமானி ஸ்மிட் மச்சாருக்கு பிரதமர் நெதன்யாகு அழைப்பு
-
தேசிய இறகுபந்து போட்டி குமுதா பள்ளி மாணவி தேர்வு