ஐவர் கால்பந்து போட்டி
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டிகள் நடந்தது.
உசிலம்பட்டி கால்பந்தாட்ட கழக நிர்வாகிகள் வினோதன், கோச் பிரைனார்ட், யுவராஜ், அகஸ்தியர் உள்ளிட்டோர் முன்னிலையில் சிறப்பு விருந்தினர் பிரேம்குமார் துவக்கி வைத்தார்.
மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து 24 அணி வீரர்கள் பங்கேற்றனர். 14 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கான போட்டியில், மதுரை டி நோபிலி அணி முதல் பரிசு, திருநகர் அட்மி அணி 2 ம் பரிசு, மதுரை தாசா அணி மூன்றாம் பரியை பெற்றனர். 10 வயது பிரிவில் மதுரை எப்.சி., அணி முதல் பரிசும், மதுரை அட்மி அணி 2 ம் பரிசு, உசிலம்பட்டி எப்.சி., அணி 3 ம் பரிசையும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு கேடயமும், பரிசுத்தொகை வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement