அசாமில் இருந்து வங்கதேசத்துக்கு முதலாவது சர்வதேச சரக்கு சேவை
நமது நிருபர்
வடகிழக்கு மாநிலமான அசாமின் திப்ருகரில் உள்ள போகிபீல் முனையத்தில் இருந்து 540 டன் மெத்தனால் ஏற்றிய சரக்கு படகு, வங்கதேச தலைநகர் தாகாவை நோக்கி இன்று தன் பயணத்தை தொடங்கியது.
நம் நாடு சுதந்திரம் அடைந்த பின், வடக்கு அசாம் பகுதியில் இருந்து வெளிநாட்டு துறைமுகத்துக்கு அனுப்பப்படும் முதல் சரக்கு போக்குவரத்து இது. கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த திப்ருகர் நகரின் பிரம்மபுத்ரா நதிப்படித்துறை வழியாக மீண்டும் சரக்கு போக்குவரத்து தொடங்கியுள்ளது.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், சரக்கு படகை போகிபீல் முனையத்தில் இருந்து கொடியசைத்து அனுப்பி வைத்தார். அரசுக்கு சொந்தமான, 'அசாம் பெட்ரோ-கெமிக்கல்ஸ்' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மெத்தனால், வங்கதேசத்தின் தாகாவில் உள்ள பங்காவோன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த சரக்கு படகு, நம் நாட்டின் பிரம்மபுத்திரா நதியின் தேசிய நீர்வழி - -2 வழியாக சுமார் 768 கி.மீ., பயணித்து இந்தியா - வங்கதேச எல்லையை அடையும். பின்னர், இந்தியா - வங்கதேச நீர் வழித்தடம் வழியாக தொடர்ந்து பயணிக்கும். திப்ருகரின் போகிபீலில் இருந்து தாகாவின் நாராயண்கஞ்ச் வரை இந்த படகு மொத்தம் 1,300 கி.மீ., பயணம் மேற்கொள்ளும்.
வடகிழக்கு இந்தியாவை வெளிநாட்டு சந்தைகளுடன் இணைக்கும் வணிக ரீதியாக சாத்தியமான சரக்கு போக்குவரத்து பாதையாக பிரம்மபுத்திரா நதியை பயன்படுத்த முடியுமா என்பதை சோதிக்கும் வகையில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
ReTake ExIndia MuslimSeccessionist Bangladesh esp Chittangong Hill Tracts-Ports& Chicken Necksமேலும்
-
நண்பர் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு: 2 பேர் மீது வழக்கு
-
பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி ‘ரெய்டு’
-
பிளைதுபாய் விமானத்தை சுட்டு வீழ்த்த தயாரான இஸ்ரேல்! வெளியான அதிர்ச்சி தகவல்
-
மின் இணைப்பு வழங்க இழுத்தடிப்பு
-
நாகர்கோவில் ரயில் திருப்பூர் வராது
-
கோவை அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் ஹிந்தி; கிளம்பியது சர்ச்சை