நண்பர் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு: 2 பேர் மீது வழக்கு

பேரையூர்:

டி.கல்லுப்பட்டி முத்தையா மூப்பர் தெரு ஆகாஷ். இவர் அதே ஊரில் ரத்தப்பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் தனியார் ரத்தப் பரிசோதனை மையத்தில் வேலை செய்த போது வாடிப்பட்டி செந்தில் குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகினர். செந்தில்குமாருக்கு உடல்நலம் சரியில்லாததால் டி.கல்லுப்பட்டி வீட்டில் தங்க வைத்து ஆகாஷ் உதவி செய்தார்.

இந்நிலையில் வீட்டில் தங்கிய செந்தில்குமார் தன் நண்பர் ஆரப்பாளையம் முத்துகிருஷ்ணனை அழைத்து ஊருக்கு கூட்டிச் செல்லுமாறு கூறியிருப்பதாக ஆகாஷிடம் தெரிவித்தார்.

ஆகாஷ் தன் ரத்தப்பரிசோதனை நிலையத்தில் வீட்டை பூட்டி சாவியை அவரிடம் செந்தில்குமாரும், முத்து கிருஷ்ணனும் கொடுத்து சென்றனர்.

ஆகாஷ் வீட்டிற்கு வந்து பார்த்த போது 9 பவுன் நகையை காணவில்லை. ஆகாஷ் மனைவி கிருஷ்ணதிவ்யா 21, அளித்த புகாரின் பேரில் செந்தில்குமார், முத்துகிருஷ்ணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement