காங்கோ ஆற்றில் படகுகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பேர் பலி
-நமது நிருபர்-
காங்கோ ஆற்றில் படகுகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர்; மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
காங்கோவின் ஈக்வேட்டர் மாகாணத்தில் வெவ்வேறு திசைகளிலிருந்து வந்து கொண்டிருந்த இரண்டு மோட்டார் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. படகுகளில் ஒன்று, நாட்டின் வடமேற்குப் பகுதியிலுள்ள உபாங்கியிலிருந்து காங்கோவின் தலைநகரான கின்ஷாசாவுக்குச் சென்று கொண்டிருந்தது. மற்றொரு படகு கின்ஷாசாவிலிருந்து லுகோலேலாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை; காங்கோவில் இது போன்ற படகு விபத்துக்கள் மிகவும் சாதாரணமாகிவிட்டன . சில நாட்களுக்கு முன்புதான், கிழக்கு காங்கோவின் ஏரியில் ஒரு படகு கவிழ்ந்ததில், 12 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
இந்தியா - இலங்கை கூட்டு பணி குழு கூட்டம்: ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்
-
நேற்றைய தினம் லஞ்ச வழக்கில் சிக்கியவர்கள் இவர்கள் தான்!
-
குடும்ப பிரச்னை கணவர் தற்கொலை
-
போதை எதிர்ப்பு சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்
-
பள்ளி மாணவன் மாயம் போலீசார் விசாரணை
-
மின்சாரம் தாக்கி டிரைவர் சாவு சேதராப்பட்டில் நள்ளிரவில் மறியல்