போதை எதிர்ப்பு சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்

வடலூர்: போதை எதிர்ப்பு சங்கத்தினர் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது

தமிழ்நாடு போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும், மறுவாழ்வு சங்கம் சார்பில் போதை இல்லா தமிழகத்தை உருவாக்கவும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.

காந்தி ஜெயந்தி அன்று துவங்கிய இந்த கையெழுத்து இயக்கம் நேற்று வடலூர் பெருவெளியில் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள், சன்மார்க்கர்கள் கலந்து கொண்டு பூரண மதுவிலக்கை அங்கீகரித்து கையெழுத்திட்டனர்.

சங்கத்தின் மாநில தலைவர் ராஜ்குமார், மாநிலக் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பரமசிவம், சட்டக்குழு தலைவர் ராமச்சந்திரன், கொள்கை பரப்பு செயலாளர் வெங்கடேசன், துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணை பொது செயலாளர் சுந்தர்ராஜன், அசோக்குமார உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement