பள்ளி மாணவன் மாயம் போலீசார் விசாரணை

சிதம்பரம்: பள்ளிக்கு சென்ற மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

சிதம்பரம் சாந்தி நகரை சேர்ந்தவர் குணசேகரன் மகன் கவின்ராஜ்,16; இவர் வேங்கான் தெருவில் உள்ள தனியார் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை, நேற்று காலை வழக்கம் போல், குணசேகரன் பள்ளி வாசலில் இறக்கிவிட்டு சென்றார்.

மதியம் சாப்பிட வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த குணசேகரன், பள்ளிக்கு சென்று விசாரித்தார். அப்போது, காலையில் இருந்தே கவின்ராஜ் பள்ளிக்கு வராதது தெரிய வந்தது.

இதுகுறித்து குணசேகரன் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து, கவின் ராஜை தேடிவருகின்றனர்.

Advertisement