நேற்றைய தினம் லஞ்ச வழக்கில் சிக்கியவர்கள் இவர்கள் தான்!
சென்னை: தமிழகத்தில் வெவ்வேறு ஊர்களில் லஞ்சம் வாங்கிய விமான போக்குவரத்து அதிகாரி, வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட மூவர், நேற்று(அக்.,5) கைது செய்யப்பட்டனர்.
ரூ.4,000 லஞ்சம் வாங்கிய சிட்லப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் கைது
சிட்லப்பாக்கம்: சிட்லப்பாக்கத்தில், பட்டா பெயர் மாற்றத்திற்கு, 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பிரசாந்த், என்ற வருவாய் ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று கைது செய்தனர்.
தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர், தன் நிலத்தை அளவீடு செய்து, பட்டாவில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ள தந்தையின் பெயரை திருத்தம் செய்யக்கோரி, தாம்பரம் வட்டாச்சியர் அலுவலகத்தில், மனு அளித்திருந்தார். அந்த மனுவை பரிசீலித்து, மேல் நடவடிக்கைக்காக பரிந்துரை செய்வதற்கு, சிட்லபாக்கம் வருவாய் ஆய்வாளரான பிரசாந்த் என்பவர், 4,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத மனோஜ்குமார், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகாரளித்தார்.
இதையடுத்து போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய 4,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை, மனோஜ்குமாரிடம் இருந்து வருவாய் ஆய்வாளர் பிரசாந்த், நேற்று வாங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், பிரசாந்தை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர். அவரிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.2.50 லட்சம் லஞ்சம் வாங்கிய விமான போக்குவரத்து அதிகாரி கைது
சென்னை: விமான பயிற்சி மையத்தில் உள்ள குறைபாடுகளை கண்டுகொள்ளாமல் இருக்க, லஞ்சமாக மொபைல் போன் மற்றும் 2.50 லட்சம் ரூபாய் வாங்கிய, சிவில் விமான போக்குவரத்து துறை தலைமை இயக்ககத்தின் துணை இயக்குநர் சுசில்குமார் கர்க், 44, மற்றும் விமான பயிற்சி நிறுவன இயக்குநர் சச்சின் கேசவ் பானே, 40, ஆகியோர், சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மீனம்பாக்கத்தில், சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்ககம் செயல்படுகிறது. இதில், விமான பயிற்சி மையங்களுக்கு உரிமம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை கவனித்து வரும், விமான தகுதி நிலை என்ற பிரிவின் துணை இயக்குநராக, சுசில்குமார் கர்க் பணிபுரிகிறார். இவர், விமான பயிற்சி நிறுவனத்தின் இயக்குநரிடம் லஞ்சம் கேட்பதாக, டில்லி சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு, கடந்த 3ம் தேதி மாலை, 5:00 மணிக்கு புகார் கிடைத்துள்ளது. இதையடுத்து, சுசில்குமார் கர்க் மற்றும் இவரது கூட்டாளிகளின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்தனர்.
சி.பி.ஐ., தொடர் விசாரணையில், மஹாராஷ்டிரா மாநிலம், தானே பகுதியில், 'எக்வி ஏர் டிரெய்னிங்' என்ற விமான பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருவதும், இந்நிறுவனம், சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே, காமலாபுரம் என்ற இடத்தில், ஏழு விமானங்களுடன் பயிற்சி மையத்தை நடத்தி வருவதும் தெரியவந்தது. இந்நிறுவனத்தில், கடந்த ஜூலை 31ம் தேதி சுசில்குமார் ஆய்வு செய்துள்ளார். அப்போது, பயிற்சி மையத்தில், விதிகளை பின்பற்றாமல் குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இக்குறைபாடுகளை கண்டுகொள்ளாமல் இருக்க, விமான பயிற்சி மையத்தின் இயக்குநர் சச்சின் கேசவ் பானேவிடம், லஞ்சம் கேட்டுள்ளார். தன்னுடன் மற்ற அதிகாரிகளும் இருந்ததால், லஞ்சப் பணத்தை அவரால் பெற முடியவில்லை. அதன்பின், கடந்த, 2ம் தேதி, சச்சின் கேசவ் பானேவுடன் பேச்சு நடத்தி, லஞ்சமாக, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனையும், அதன்பின், 2.50 லட்சம் ரூபாயையும் வாங்கி உள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சுசில்குமார் கர்க், சச்சின் கேசவ் பானே இருவரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்த, சி.பி.ஐ., அதிகாரிகள், டில்லி அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சுகாதார அலுவலர் கைது
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சுகாதாரத்துறை ஒப்பந்த வாகனத்திற்குரிய வாடகை தொகையை விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட சுகாதார அலுவலர் ஜெகவீரபாண்டியனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி வெம்பக்கோட்டை அருகே எதிர்கோட்டையைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரன் 31. இவரது கார் தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய சுகாதார இயக்கத்தில் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட நடமாடும் குழுவுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாத வாடகைக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாகனத்திற்கு ஆக., செப்., மாதங்களுக்குரிய வாடகை தொகையை விடுவிக்க சுகாதாரத்துறையின் சிவகாசி மாவட்ட சுகாதார அலுவலர் ஜெகவீரபாண்டியன், ஒரு மாதத்திற்கு ரூ.2,500 வீதம் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக பாண்டீஸ்வரனிடம் கேட்டார்.
ஆனால் பாண்டீஸ்வரன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் தெரிவித்தார். அவர்கள் கொடுத்த அறிவுறுதலின்படி நேற்று மாலை ரசாயனம் தடவிய பணத்தை பாண்டீஸ்வரன் சுகாதார அலுவலர் ஜெகவீரபாண்டியனிடம் கொடுத்தார். அதனை பெற்ற ஜெகவீரபாண்டியனை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமசந்திரன், இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
ஆதாரத்துடன் பிடிபட்டவுடனேயே இந்த லஞ்சப்பேய்களின் கட்டை விரல்களை அறுத்துவிடவேண்டும்.
ஐயா ஊழல் மேலேருந்து தான் கீழே வரும் முதல்வர் தங்க மோதிரம் திட்டத்துக்கு 1 கிராம் தங்கத்தில் மோதிரம் செய்து தர ஜாய் ஆலுக்காஸ் கூலி 1 பைசா மட்டும் தாங்க என சொல்லி டெண்டர் ஜெயித்து, அரசிடம் தங்கம் வாங்கி செய்து தருவாங்களாம். ஐயா எவனாவது 1 பைசா கூலி கட்டணத்தில் 1கிராம் தங்க மோதிரம் செஞ்சு தருவதாக சொன்னா அது ஊழல் இல்லியா. ??? யாருங்க இதை நம்பவாங்கன்னு பாத்தா நம்ம உசார் பார்ட்டிகளான தமிழ் நாடாடு மக்கள் தான் நம்புறாங்க. ஏன்னா 1 கிராம் தங்கம் ₹13,675/- இன்று ன்னா சும்மாவா? விஜய் அண்ணா தாங்கண்ணா வாங்கிக்கிறோம்
தாய்மாமன் தந்த தங்கமோதிரம் அடகுகடைக்கு மார்வாடிகிட்ட போன பின் தான் மோதிரத்தின் தராதரம் தெரியவரும்.
இன்று லஞ்சம் வாங்கி சிக்கியோர்
என்ற தலைப்பில் தனியாக பட்டியல் வெளியிடலாமே
தேர்தல் பிரச்சாரத்தின்போது... சிட்டிகை போட்டு நான் வந்த அடுத்த நொடியே லஞ்சம் ஊழலை ஒழிப்பேன்னு சொன்னாரு... ஆறு மாசமாச்சு இன்னும் லஞ்சம் ஒழிக்கவில்லை... இவர் என்ன இவரை படைத்த கர்த்தரே வந்தாலும், லஞ்சத்தை ஒழிக்க முடியாது... அது புரையோடிய புற்றுநோய்... இதை இவர் என்ன குட்டிகரணம் போட்டாலும் அழிக்க, முடியாது...? இதுல வேற டெய்லி.... இன்று ஒரு தகவல்..மாதிரி விஜய்..ஆட்சிய மெச்சுற மாதிரி... இத்தனை பேர் லஞ்சம் வாங்கியவர்கள் கைது...ன்னு டைட்டில் கார்டு போடுறாங்க..
நீங்களும் நானும் லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க நினைக்கும்போது முதல்வரால் என்ன செய்ய முடியும்...
மாற்றம் நம்மிடம் இருந்து வரவேண்டும்.
sundaran manogaran .. முதல்வர் வார்த்தைக்கு மதிப்பில்லை. கேட்டபின்னும் லஞ்சம் கொடுக்கவில்லையென்றால் File கிடப்பில் போடப்படும். மக்கள் அதிலிருந்து மீண்டு வருவதெப்படி..? எல்லோருராலும் லஞ் ஒழிப்புதுறைக்கு சென்று புகார் கொடுத்து மீண்டுவர முடியாது.
முதல்வர் பொது மேடையில் அறை கூவல் விடுதால், உடனே நாங்கள் பயந்து நடுங்கி லஞ்சம் வாங்குவதை நிறுத்த முடியுமா..?
இதிலிருந்து என்ன தெரியவருகிறது விசில் கட்சிக்காரர்கள் அவர்களது ஆதரவாளர்கள் கூறுவது போல் லஞ்சம் ஒழியவில்லை அது இன்னும் இருக்கு. நான் வந்த அடுத்த நொடி புடுங்கி நட்டுவிடுவேன் என்று சொன்னதெல்லாம் வெத்து வேட்டு. கப்சா. ஒவ்வொரு வாக்குறுதியும் காத்துல பறக்குது. சுத்த வேஸ்ட்.
இதேபோல் கோடிகள் வாங்கிய வர்களை கைது செய்ய முடியுமா. அது மட்டும் ஏன் முடியவில்லை.
லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் தந்தால் தானே பிடிக்க முடியும்.
தினமும் எத்தனை கொலைகள் நடந்தன, பாலியல் குற்றங்கள் நடந்தன என்பதை பற்றியும் போடலாமே?
அதெல்லாம் போடமாட்டாங்க... ஏன்னா, விஜய்க்கு கெட்ட பெயர் வந்துடுமே...? இதுமாதிரி... தி.மு.க.ஆட்சியில் இருந்த, இருக்கிற இத்தனை பேர் லஞ்சம் வாங்குனாங்க...பார்த்தீங்களா விஜய் தன்படத்தில் பறந்து பறந்து வில்லனை பிடிப்பது போல... லஞ்சம் வாங்குன இத்தனை பேரை பிடிச்சிட்டார் பார்த்தியா... இந்த விஜய்தான் வானத்தில் இருந்து குதித்தவர்... தமிழ்நாட்டை காக்க வந்த நேர்மையின் மறுபிறப்பு... அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர்னு விஜய்புராணம் பாடணும் இல்ல... கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்களின் பட்டியல் போட்டா... சட்டம்-ஒழுங்கு சீர்கேடு வெளியே தெரிஞ்சுடுமில்ல... இதுதான் பத்திரிகை தர்மம்...? இதுமட்டுமா... நேத்துலந்து செவிலியர் போராட்டம் பண்ணி காவல்துறை கைது செஞ்சிட்டிருக்கு... அதைப் பத்தி மூச்சு விடுறாங்களா பார்...மேலும்
-
ஆட்சித் தலைமைப் பொறுப்பில் மோடியின் 25 ஆண்டுகள்: 'கர்மயோகி'யின் சேவைப் பயணம்!
-
6 மணிக்குள் வெளியேற வேண்டும்: ஜமாத் அறிவிப்பால் சர்ச்சை
-
பெரிய தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது ரஷ்யா; நட்பு நாடுகளிடம் ஆதரவு கேட்கிறார் ஜெலன்ஸ்கி
-
பெண் பத்திரிகையாளர் மீது பாலியல் சீண்டல் என்று போலி படம் வெளியிட்ட நதீம் அஹமது கைது
-
கரூர் பழைய பஸ் ஸ்டாண்டில் பள்ளங்களால் டிரைவர்கள் அவதி
-
சின்டெக்ஸ் தொட்டி, குழாய் சேதத்தால் சிரமத்தில் மக்கள்