போனஸ் கோரி ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு:அகில இந்திய ரயில்வே ஓடும் தொழிலாளர் சங்கத்தினர், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய கமிட்டி உறுப்பினர் பாபு ராஜன் தலைமை வகித்தார்.

கோட்ட செயலாளர் அருண்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்கத்தின் (டி.ஆர்.இ.யு.,) சேலம் கோட்ட செயலாளர் முருகேசன் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
மத்திய அரசு போனஸ் விவகாரத்தில், போனஸை கணக்கிடுவதற்கான அடிப்படை ஊதியத்தை, 7,000 ரூபாயில் இருந்து 28,440 ரூபாயாக உயர்த்த வேண்டும். உற்பத்தி திறன் சார்ந்த போனசை, 78 நாட்களுக்கான அளவிலிருந்து உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement