தாய், மகள்கள் உள்பட மூவர் விபத்தில் காயம்

கோபி:கோபி அருகே பள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் துர்காதேவி, 43; தனியார் பள்ளி ஆசிரியை; தனது, 10, 13 வயது மகள்களுடன் மொபட்டில் நேற்று காலை பள்ளிக்கு சென்றார்.

பள்ளம்பாளையம் பிரிவில் சென்றபோது, சத்தியமங்கலத்தை சேர்ந்த சக்திவேல், 40, ஓட்டி வந்த லாரி மோதியது. இதில் மொபட்டில் பயணித்த தாய், மகள்கள் உள்பட மூவரும் காயமடைந்தார். மூவரும் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். துர்காதேவி புகாரின்படி கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement