பைக்கில் குட்கா கடத்தி வந்தவர் கைது

பெருந்துறை:பெருந்துறை அடுத்த திருவாச்சியில் தேசிய நெடுஞ்சாலையில், பெருந்துறை போலீசார் நேற்று வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது பைக்கில் மூட்டையுடன் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

மூட்டையில், 30 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் இருந்தன. விசாரணையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி சிங்கிபுரத்தை சேர்ந்த சிவபாலன், 38, என தெரிந்தது. குட்காவை பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement