நைஜீரிய ராணுவ விமான விபத்தில் 32 பேர் பலி

-நமது நிருபர்-

நைஜீரிய ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

நைஜீரியாவில் பெனின் நகரிலிருந்து லாகோஸ் நோக்கி அந்நாட்டுக்கு சொந்தமான ராணு விமானம் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது விமானம் விபத்தில் சிக்கி, பயணித்த 32 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி போலா டினுபு இரங்கல் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

இந்த சம்பவம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது; விமானப் படைத் தலைமைத் தளபதி எனக்கு விளக்கமளித்துள்ளார், மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் பொருட்டு, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையை தொடங்குமாறு நைஜீரிய விமானப் படைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்," என கூறியுள்ளார்.

Advertisement