காட்டுயானைகள் முகாம்

தாண்டிக்குடி: தாண்டிக்குடி மலைப்பகுதியில் சில வாரங்களாக காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. முருகன் கோயில், பெருங்கானல், காமனுார், குன்னவழி, இடைமலை பகுதியில் சுற்றித்திரிந்த யானைகள் சவ்சவ் பந்தல், காபி, அவகடா, ஏலக்காய், மலைவாழை, பீன்ஸ் பயிர்களை சேதப்படுத்தின. வனத்துறையினர் அந்த யானைகளை விரட்ட வெடிகள் வெடிக்க செய்தும் தொடர்ந்து போக்கு காட்டி வருகின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகள், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement