இடைத்தேர்தலில் த.வெ.க., வெற்றிக்கு 1,008 படிகளில் முட்டி போட்டு ஏறி வழிபாடு; வாலிபர் நுாதன செயல்

நமது நிருபர்

இடைத்தேர்தலில் த.வெ.க., வெற்றி பெற, நாட்றம்பள்ளி அருகே மலைக்கோவிலில், 1,008 படிகளில் முட்டி போட்டு ஏறி, வாலிபர் நுாதன வழிபாடு நடத்தினார்.

திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தரபள்ளியைச் சேர்ந்தவர் குறளரசன், 30. த.வெ.க., நாட்றம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலர்.

இடைத்தேர்தலில் போட்டியிட்ட தாராபுரம் தொகுதி வேட்பாளர் சத்யபாமா, மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேல், ஆகியோர், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டி, நாட்றம்பள்ளி அடுத்த அக்ரஹாரம் மலைக்குன்றிலுள்ள, சீனிவாச பெருமாள் கோவிலிற்கு, 1,008 படியை முட்டி போட்டு ஏறிச்சென்று, சீனிவாச பெருமாளுக்கு, சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.

முட்டிப்போட்டு படி ஏறியதால், இரு கால் முட்டிகளிலும் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ஆனால், அதையும் பொருட்படுத்தாமல், 1,008 படியையும் முட்டி போட்டு ஏறி சென்று, மொட்டை அடித்து, வழிபாடு நடத்தினார்.

Advertisement