சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்; இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
ரியாத்: சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள் மீது குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, சவுதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து இந்தியர்கள் விழிப்புடன் இருக்குமாறும், தேவைப்படும்போது வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளால் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.
தற்போதைய சூழல் குறித்து எந்தவொரு வீடியோ அல்லது செய்தியையும் பரப்புவதையோ தவிர்க்குமாறு இந்தியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம், ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகம் தேவைப்படும்போது அவ்வப்போது புதிய தகவல்களும் அறிவுறுத்தல்களும் வழங்கப்படும்.
24 மணிநேர அவசர கட்டணமில்லா உதவி எண் 8002471234 தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது. இந்தியச் சமூகத்தினர் புதிய தகவல்களைப் பெறத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களைப் பின்தொடரலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இரான் தலைமை முல்லாவாதிகளின் அடிவருடிகள் இந்த ஹவுதிகள். இவர்களின் வேலையே நாசம் செய்வது .உலக தீவிரவாதத்துக்கு தலைமை இரான் முல்லாவாதிகள். இவர்களை ஒழித்தாலன்றி உலகில் நிம்மதியில்லை
வஹாபிஇசத்தை ஊக்குவித்து இந்தியா போன்றநாடுகளில் வன்முறையை வளர்த்துவிட்டதன் பிரதிபலன்மேலும்
-
அமெரிக்க தேர்தல் வரை ஈரான் மீது தாக்குதல் நடத்தமாட்டோம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
பாரிஸில் வெடித்தது மாணவர் போராட்டம்: பள்ளிகள் மூடல்
-
பிளைதுபாய் பயணிகள் 6 பேருக்கு விருது; இந்திய விமானிக்கு உடல் நலம் தேறியதும் ஜனாதிபதி பதக்கம் வழங்குகிறது இஸ்ரேல்
-
போலி வீடியோக்களுக்கு கடிவாளம்: சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு
-
நவீன கால தாமஸ் ஆல்வா எடிசன்: எலான் மஸ்க்கை புகழ்ந்த டிரம்ப்
-
டில்லி ஜந்தர் மந்தரில் நாளை போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு: போலீஸ் கடும் எச்சரிக்கை