திண்டுக்கல் டிவிஷன் லீக் கிரிக்கெட் போட்டிகள்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக் டி.டி.சி.ஏ., கிரிக்கெட் பிரசித்தி வித்யோதயா, பார்சன்ஸ் கோர்ட் கோப்பைக்கான லீக் போட்டிகள் பி.எஸ்.என்.ஏ., ஆர்.வி.எஸ். கல்லுாரி மைதானத்தில் நடந்தன.
அய்யலுார் கிளாசிக் சி.சி., அணியி சாமுராய் சி.சி.,அணி மோதிய ஆட்டம் நடந்தது. முதலில் விளையாடிய கிளாசிக் அணி 30 ஓவரில் 214 ரன்கள் எடுத்தது. ராஜபாண்டி 53, சிவக்குமார் 39 ரன்கள் எடுத்தனர். டொமினிக் சாம்சன் 3, மகேஷ் பூபதி 4விக்கெட் வீழ்த்தினர். அடுத்து விளையாடிய சாமுராய் அணி 25.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 155 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. கார்த்திக் 69, ஜெகன்குமார் 39 ரன்கள் எடுத்தனர். சரவணக்குமார் 5, பரமேஸ்வரன் 3 விக்கெட் எடுத்தனர்.
திண்டுக்கல் மன்சூர் சி.சி., அணியினர் 27 ஓவரில் 128 ரன்கள் எடுத்தது. வெங்கடேஷ் சுந்தர் 35, கவி செல்வம் 54 ரன், நாக மணிகண்டன் 4 விக்கெட் எடுத்தனர். அடுத்து விளையாடிய வேடசந்துார் சீனிபாலா சி.சி., அணி 23.1 ஓவரில் 91 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அருண் சிவக்குமரன் 25 ரன், அப்சர் அலி 3 விக்கெட் எடுத்தனர்.
பாப்பம்பட்டி எய்ம்ஸ்டார் சி.சி., பழநி யுவராஜ் எங்ஸ்டர்ஸ் சி.சி., அணி மோதிய ஆட்டத்தில் முதலில் ஆடிய எய்ம்ஸ்டார் 23.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. கார்த்திகேயன் 30 ரன், பிரபு 5, துரைராஜ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அடுத்து ஆடிய யுவராஜ் எங்ஸ்டர்ஸ் அணி 25 ஓவரில் 131 ரன்கள் எடுத்து 3 ரன்னில் தோல்வி அடைந்தது. கதிரேசன் 30, செந்தில் வேலவன் 34, மகுடீஸ்வரன் 27 ரன்கள், ராஜ்குமார் 3 விக்கெட் எடுத்தனர்.
பார்சன்ஸ் கோர்ட் கோப்பைக்கான டிவிஷன் லீக் போட்டியில் நல்லாம்பட்டி யங்ஸ்டர்ஸ் சி.சி.,அணி நத்தம் சேலன்ஜர்ஸ் சி.சி., அணி விளையாடின. நல்லாம்பட்டி அணி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 67 ரன்கள் எடுத்தது. முகமது ஆசிக் 3, பாரதிதாசன் 5 விக்கெட் எடுத்தனர். அடுத்து விளையாடிய சேலன்ஜர்ஸ் அணி 9.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திருப்பதி 3 விக்கெட் எடுத்தார்.