‘தினமலர்’ போட்டோகிராபரை தாக்கிய மூவருக்கு ‘2 ஆண்டு’
திருப்பூர்: திருப்பூர் ‘தினமலர்’ போட்டோகிராபர் கார்த்திக்குமார். கடந்த 2022, நவ., 2 இரவு, அவிநாசி சாலை புஷ்பா ரவுண்டானா சந்திப்பில் மழை காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை படம் எடுத்துக் கொண்டிருந்தார்.
அந்த வழியாக வேகமாக வந்த ஹோண்டா டியோ ஸ்கூட்டர், கார்த்திக்குமார் அருகே திடீரென நின்றது.
அதில் வந்த நபர் ஒருவர், கார்த்திக்குமாரை எட்டித் தள்ளி கீழே விழச் செய்தார். தொடர்ந்து, மற்றொருவர் அவரது கழுத்தை பிடித்து மிரட்டிய நிலையில், மூன்றாவது நபர் அவர் வைத்திருந்த அலுவலக கேமராவை பறிக்க முயன்றார்.
கார்த்திக்குமார் போராடியதுடன் சத்தமிட்டதால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
இதையடுத்து, 3 பேரும் கார்த்திக்குமாரை எட்டி உதைத்துவிட்டு, ஸ்கூட்டரில் ரயில்வே மேம்பாலம் சாலை நோக்கி தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரில், திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சம்பவத்தில் தொடர்புடைய, திருப்பூர், ஆலங்காடு, சூசையாபுரத்தை சேர்ந்த சிவகுமார், 26, ராஜேஷ், 23, சுரேஷ்குமார், 23 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில், 3 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி செந்தில்ராஜா தீர்ப்பளித்தார்.
மேலும்
-
மேற்கு வங்க இடைத்தேர்தல்; இரு தொகுதிகளிலும் பாஜ முன்னிலை
-
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; உள்துறை செயலாளர் மணிவாசன் இடமாற்றம்
-
தாராபுரம், மதுராந்தகம் 2 தொகுதியிலும் தவெக முன்னிலை; புதுச்சேரியில் என்ஆர்காங்கிரஸ் வெற்றி
-
அமெரிக்க தேர்தல் வரை ஈரான் மீது தாக்குதல் நடத்தமாட்டோம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
பாரிஸில் வெடித்தது மாணவர் போராட்டம்: பள்ளிகள் மூடல்
-
பிளைதுபாய் பயணிகள் 6 பேருக்கு விருது; இந்திய விமானிக்கு உடல் நலம் தேறியதும் ஜனாதிபதி பதக்கம் வழங்குகிறது இஸ்ரேல்