போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்

தாம்பரம்: போனஸ் உயர்வு கோரி, ரயில்வே ஊழியர்கள் தாம்பரத்தில் நேற்று, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ரயில்வே துறை ஊழியர்களுக்கு, 14 ஆண்டுகளாக போனஸ் உயர்வு வழங்கப்படவில்லை. போனஸ் கணக்கீட்டிற்கான உச்ச வரம்பை உயர்த்த, மத்திய அரசு மறுத்து வருகிறது எனக்கூறி, தாம்பரம் ரயில்வே பணிமனை அருகே நேற்று, ரயில்வே ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, போனஸ் கணக்கீட்டுக்கான அடிப்படை ஊதியத்தை, 7,000- ரூபாயில் இருந்து 28 ஆயிரத்து, 440 ரூபாயாக உயர்த்த வேண்டும்; உற்பத்தித் திறனுக்கு ஏற்ப, 78 நாள் போனஸ் வழங்க வேண்டும் என, வலியுறுத்தினர்.

Advertisement