முதல் டி-20 கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: இந்தியா வெற்றி

1

லக்னோ: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில்
இந்திய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள வெ ஸ்ட் இண்டீஸ் அணி, ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. 2-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை இழந்தது.

அதை தொடர்ந்து, இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று உ.பி. மாநிலம் லக்னோவில் உள்ள ஏகானா மை தானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச முடிவு செய்தது.

இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஷாய் ஹோப் தலைமை தாங்கினர்.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

ஷெர்பேன் ரூதர்போர்டு, ஷாய் ஹோப் அரைசதம்:

அதிகபட்சமாக ஷெர்பேன் ரூதர்போர்டு 56 ரன்களும், கேப்டன் ஷாய் ஹோப் 52 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அறிமுக வீரர் நமன் தீர் 3 விக்கெட்டுகளையும், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி அடுத்து களமிறங்கியது.

ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்:

துவக்க வீரர்களான சஞ்சு சாம்சன் 11 ரன்னிலும் அபிஷே க் சர்மா 21 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். அவர் 43 பந்துகளில் சதம் அடித்து ஆட்டமிழக்காமல் 102 ரன்களும், இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 37 ரன்கள் சேர்க்க, இந்திய அணி 14.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 172 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெ ற்றி பெற்றது.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி, 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

Advertisement